ராகங்கள் பேசுவோம்..!!

இளையராஜாவிற்கு, அவரது பாடல்களை இன்ன ராகம் என்று கூறினால் பிடிக்காது என்று கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பாடல்களை ராகங்களோடு இணைத்துப்பார்ப்பது என்பது அந்த பாடலுக்கு செய்யப்படும் மரியாதையே ஒழிய குறைவு அன்று. ராகங்கள் அநாதியானவை. எந்த ராகத்திற்கும் அதைச் உருவாக்கியவர் என்பவர் கிடையாது. காலம்தோறும் மெருகூட்டப்பட்டு காலங்காலமாக உருவாகி வந்த ஒலிக்குறிப்பு அது. ராகம், அது தோன்றி வளர்ந்த ஒரு பரப்பின் பண்பாட்டை, கலாசாரத்தைச் சொல்கிறது. ராகங்கள் முடிவில்லாத சாத்தியங்கள் கொண்டதும் கூட. பாடல் என்பது ராகத்தின் ஒரு துளி மட்டுமே. இப்படிச்சொல்லலாம் ராகம் என்பது ப்ரஹ்மம் போன்றது. பாடல் என்பது ஜீவராசிகள் போன்றது. பற்பல ப்ரஹ்மங்களும், பற்பல ஜீவராசிகளும் இங்கே இருந்துகொண்டிருக்கிறது. இதில் ஒரு ஜீவராசியை ப்ரஹ்மம் என்று அடையாளம் கொள்வது அதற்கு பெருமையாகத்தான் இருக்கமுடியும். இளையராஜாவே கட்டையால் அடித்தாலும், ப்ரஹ்மம் ப்ரஹ்மத்தை அடிக்கிறது என்று நாம் அவரது பாடல்களை ராகங்களால் அடையாளப்படுத்துவோம்.

செந்தில் வேல் ராமன் என்பவர் இதை தொகுத்து வைத்திருக்கிறார்.

http://www.oocities.com/ilaiyaragam/

Advertisements

About ராமச்சந்த்ர சர்மா
A Music Buff

5 Responses to ராகங்கள் பேசுவோம்..!!

 1. ஐயா, இது ஒரு தவறான கருத்து.

  இளையராஜா பொதுவாகவே ஏதேனும் ராகத்தில் பாட்டை அமைத்தாலும், அதில் ஏதேனும் ஒரு சிறு சில்மிஷம் செய்து வைத்திருப்பார். ஒன்று ராகத்தின் ஒரு ஸ்வரம் மட்டும் மிஸ்ஸாகியிருக்கும். (காமாட்சி கருணா விலாஸினி – தைவதமில்லாத கெளரி மனோகரி), ஒரு ஸ்வரம் அன்னியஸ்வரம் வந்திருக்கும் (இசையில் தொடங்குதம்மா – ஹம்ஸநாதம் + தைவதம்), ராக பாவத்தில் வக்ரப் பிரயோகம் மட்டுமே இருக்கும் (’மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ – சாருகேசி). இதை கவனிக்காதவர்கள் இது இன்ன ராகம்தானே என்று கேட்டால் அவருக்கு அதில் எரிச்சல் வருமாம். ’இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாட்டை ‘கேதாரத்துக்கு ஏற்பட்ட சேதாரம்’ என்று கிண்டலடித்தாராம் சுப்புடு. அதற்கு இளையராஜாவின் பதில்: ‘இது கேதாரம் என்று உங்களிடம் நான் சொன்னேனா?’. அதைப் போல ‘அந்திமழை பொழிகிறது – வசந்தாவா, ஹம்ஸாநந்தியா?’ என ஒரு மாமா ரொம்ப விஷயபூர்வமாகக் கேட்க, இளையராஜா இது இரண்டுமில்லாத இன்னொரு ராகத்தின் பெயரைச் சொன்னாராம். அதனாலேயே இது இன்ன ராகம் என்று யாரேனும் பேசத்தொடங்கினால் அவர் பெரிதும் ரியாக்ட் செய்வதில்லை. இது ராகத்துக்கு மட்டுமில்லை, கார்ட்ஸ், counterpoint போன்ற மேற்கத்திய விஷயங்களைப் பொருத்தவரையும் அவர் ‘பொதுவில்’ ரியாக்ட் செய்வது இப்படித்தான். ஆனால் உண்மையிலேயே விஷயம் தெரிந்தவர்கள் என்று தான் நினைப்பவர்களிடம் பல இசை நுணுக்கங்களையும் அவர் பேசத்தான் செய்கிறார். இளையராஜாவைக் குறித்து கிடார் பிரசன்னா எழுதிய கட்டுரையில் அதைப் படிக்கலாம். அதைப் போலவே ராகங்களைக் குறித்தும் ராகங்களில் நல்ல பரிச்சயம் இருக்கும் நண்பர்களிடம் உற்சாகமாகப் பேசவே செய்கிறார். அவர்களிடம் க்ருஹபேதம் செய்து ‘என்ன ராகமென்று தெரிகிறதா?’ எனக் குறும்பாகக் கேட்பதும் உண்டாம். அதனால் ராகங்கள் மீதும், இந்திய மரபிசை மீதும் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கும் இளையராஜா, தன் பாடல்களை ராகங்கள் மூலம் அடையாளப்படுத்துவதை அவமானமாகக் கருதுகிறார் என்று சொல்வது அரைகுறையான புரிதல் மட்டுமே.

 2. விடுபட்டதொரு செய்தி: ’மயிலே மயிலே’ பாடலை ஹம்ஸத்வனியில் அமைத்தேன், ‘தாம்த தீம்த’ பாடலை மோகனத்தில் அமைத்தேன் என்றெல்லாம் ராகங்களைக் குறிப்பிட்டுத் தன் கட்டுரையில் எழுதியது சாட்சாத் இளையராஜாவேதான் 🙂

 3. அப்படிப்போடு. இந்த விஷயம் எனக்குத்தெரியாது. பகிர்ந்தமைக்கு நன்றி சேது. உண்மையிலேயே அவர் அப்படிப்பட்டவராக இருந்தால் நிச்சயம் பாராட்டப்படவேண்டும்.

  சிறு குறிப்பு, ஹம்ஸநாதம் முன்பு தைவதமும் சேர்த்துத்தான் பாடப்பட்டது. சங்கீத ரத்னாகரத்திலும் அப்படியே குறிப்பிடப்பட்டதாக ஜானகிராமன் ஒரு லெக்-டெம்மில் குறிப்பிட்டார். பிற்காலத்தில் தைவதம் இல்லாதது ஹம்ஸநாதம் எனவும், உள்ளது சாரங்கதரங்கினி என்றும் அழைக்கப்படுகிறது.

  ராஜா குறித்து என் கண்ணைத்திறந்தீர்கள். ரொம்ப நன்றி.

 4. ராம்

  இந்த தைவதத்துடனான ஹம்ஸநாதம் என்னிடம் பெட்டகத்தில் வேதவல்லி பாடி எங்கோ இருக்கிறது. அதேபோல் TKR பாடியிருப்பதும். ஒழிகையில் தேடி எடுத்து அனுப்புகிறேன், சேதுவுக்கு 😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: