ஜெயதீர்த் மேவுந்தி & அபிஷேக் ரகுராம்

நண்பர் லலிதாராம் சிலநாட்களுக்கு முன் பேசும்போது சென்னையில் நடந்த ஒரு ஜுகல்பந்தி நிகழ்ச்சி குறித்து சொன்னார். ஜெயதீர்த்தும், அபிஷேகும் இணைந்து “மிரட்டிய” அற்புதம் என்றார். கேட்கக்கிடைக்கவில்லை.

சுமார் 10 வருடங்களாகவே அபிஷேகின் ரசிகன் நான். பேசும் எல்லாரிடமும் அவரைக்குறித்து சிலாகித்து நான் மிகவும் எதிர்பார்க்கும் ஒரு பாடகர். தற்காலத்தில் “கொள்ளாம்” எனத்தக்கவர் இவர் ஒருவரே என்றும் சொல்வதுண்டு.

ஜெயதீர்த் இப்போதைய புதிய இணைப்பு எனக்கு. அபாரம், அற்புதம் என்று வார்த்தைகளுக்குள் அடைக்க முடியாத திறமை.

ரோனு மஜும்தாருடன் இணைந்து ஜெயதீர்த் பாடிய ஒரு ஜுகல்பந்தி மிகவும் அற்புதமாக இருந்தது. சுட்டி கீழே.

 

ஜெயதீர்த் : http://en.wikipedia.org/wiki/Jayateerth_Mevundi

Advertisements

About ராமச்சந்த்ர சர்மா
A Music Buff

2 Responses to ஜெயதீர்த் மேவுந்தி & அபிஷேக் ரகுராம்

  1. ஜெயதீர்த் மேவுந்தி நான் சமீபத்தில் கேட்ட மிகச்சிறந்த பாடகர்களில் ஒருவர். அவர் பாடியிருக்கும் ஒரு மணி நேர பாட்தீப்தான் நான் இப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும் ஒன்று. என்ன, இத்தனை சின்ன வயதிலேயே, இத்தனை கவனம் அவர் மீது விழுந்திருப்பது கொஞ்சம் கவலையளிக்கிறது 😉 நம்மாட்கள் ஏத்திவிட்டு அழித்துவிடுவார்களோ என்ற பயம்தான். இதைப் போலவே இன்னொரு சிறந்த இளம் பாடகர் (பாடகி), பண்டிட் அஜய் சக்ரவர்த்தியின் மகள் கெளஷிகி சக்ரவர்த்தி.

  2. ஆமாம் சார். கர்னாடக சங்கீதப் பாடகர்களில் ஒரு பிரச்சனை என்னவென்றால், ஒன்று அவர் ப்ராடிஜியாக இருப்பார் இல்லையென்றால் முதியவராக இருப்பார். கடும் பயிற்சி என்பது இங்கே சுத்தமாக கிடையாது. இவர் ஹிந்துஸ்தானி பாடகராக இருப்பது இவருக்கு நல்லதாகிவிட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: