சங்கீத சீசன் அல்லது நீ உருப்பட மாட்டே!!

பட்டுப்புடவை சரசரக்க மாமிகள் வைரக்கல் தோடும், எட்டுக்கல் பேசரியும் போட்டுக்கொண்டு பரபரப்பாகவும், மயில்கண் வேஷ்டியும், விசிறி மடிப்பு அங்கவஸ்திரமும், நெற்றியில் விபூதியும், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடியும், கடைவாயில் வழியும் தம்பூலமுமாக மாமாக்கள் மாமிகளின் பின்னாலும், சில மேல் வர்க மாமிகள் கஞ்சி போட்டு விரைப்பாக்கப்பட்ட டிசைனர் காட்டன் புடவைகள், கோல்ட் வாட்ச் கட்டிக்கொண்டும், அவர்களை அடுத்து அடக்க ஒடுக்கமாக, அவர்களின் மகனின் குழந்தையை பார்க்க அமெரிக்கா போனபோது வாங்கிய சாயம் போன ஜீன்ஸும், டைட்டான டீ ஷர்ட்டும் அனிந்து மேல் தட்டு மாமாக்களும், குறுந்தாடி வைத்த, கடவுளைத்தேடுகிறார்களோ என்று நினைக்கக்கூடிய வகையில் ஆகாயத்தை மட்டுமே பார்க்கும், புகை ஊதி கறுத்த உதடுகளுடைய, உயர்கல்வி படித்த, லேசான எகத்தாளம் கூடிய கோனல்வாய் சிரிப்பையே எப்போதும் அளிக்கும் நவநாகரிக இளைஞர்களும், கிட்டத்தட்ட பெண்பார்க்கும் நிகழ்ச்சிக்கு வருவதுபோல அள்ளித்தெளித்த மேக்கப்பும், விசிறிய செண்ட்டுமாக யுவதிகளும், ஓரமாக சில பாவம் கதர் தட்டுவேட்டி கிழங்களும், எடிட்டரின் தொல்லை தாங்காமல் அவருக்காக குறிப்பெடுக்க வந்த ரிப்போர்ட்டர்களும், அம்மாமிகளும், மாமாக்களும் போக நிகழ்ச்சிகளை ஸ்பான்ஸர் செய்யும் இசைக்கும் அவருக்கும் ஸ்நானப்ராப்தி கூட இல்லை என்று எந்தக்கோவிலிலும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்ய சாத்தியம் உள்ள பட்டு சட்டை ப்ரதிநிதிகளும், அறிவுஜீவிக்களை தாண்டவமாடும் முகத்தோடு, எல்லாவற்றிற்குமே “ஐ நோ” சொல்லும் பாவத்தில் சபா செகரட்ரிகளும், சீசனுக்காக மட்டுமே க்ரெடிட் கார்டும், டாலருமாக இந்தியா வரும் என்.ஆர்.ஐகளும்,அவர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக சபாவின் அமைப்பாளர்களும், விருதுகளுக்கு பெயர் தேடிக்கொடுக்கும் க்ரியேடிவ் குழுவும், பெரும்பாலும் புரியாத மொழியில் பாடும் வித்வான்களும், ஸ்வராலங்காரத்தை விட தேஹாலங்காரத்தில் கவனமுடைய மேடையை ப்ராஹ்மன ஃபேஷன் ஷோ மேடையாக மாற்றும் விதூஷிகளும், தமிழ்ல பாபனாஷம் ஷிவன் பாட்டு ஒன்னு பாடப்போகிறேன் என்று கூவும் குயில்களும், எப்போதுமே மலச்சிக்கல் வந்ததுபோல முகத்தை வைத்துக்கொண்டு, எப்போது என்னை விரட்டிவிடுவார்களோ என்ற கவலையிலேயே நடுக்கத்தோடு நின்றுகொண்டிருக்கும் பார்ப்பனராக தன்னை காட்டிக்கொள்ள முடியாதவரும், உண்மையிலேயே சங்கீதம் தெரிந்த மிகச்சிலரும், இதை எப்படி ரிக்கார்ட் செய்து காசாக்கலாம் என்று திரியும் வியாபாரிகளும், சங்கீதத்தை விட மிக முக்கியமான விஷயங்கள் நிறைந்த சபா கேண்டீன்களும், நிறம்பி வழியும் சென்னை சங்கீத சீசன் குறித்து நானும் எதாவது எழுதித்தான் ஆகவேண்டும் என்பது என் விதி. ஆண்கள் பெண்கள் தவிர இதில் சொல்லாமல் விட்ட இசை விமர்சகர்கள் என்ற ஒரு குழுவும் உண்டு. இசை விமர்சனங்கள் பற்றியும், இசை அனுபவங்கள் பற்றியும் விரிவாக எழுதவேண்டும் என்ற ஆவல் சில நாட்களாக இருந்துவருகிறது, அதை நடைமுறைப்படுத்தியும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலில் தொடங்குகிறேன்.

Advertisements

About ராமச்சந்த்ர சர்மா
A Music Buff

2 Responses to சங்கீத சீசன் அல்லது நீ உருப்பட மாட்டே!!

  1. இதில் தினமணி, சொல்வனம், தமிழ்ப்பேப்பர், விகடன் மற்றும் பொதுவாக காணப்படும் இசை விமர்சன, இசை அனுபவக் கட்டுரைகள் கிழித்து தொங்க விடப்படும்(அட அனாலசிஸ் & ப்ராசசிங்ங்க). கர்னாடக இசை சாராத ஷாஜி குறித்தும் எழுதப்படும்.

  2. shankar says:

    Sir, There is one thing that you should learn from Jeyamohan. Writing with Paragraphs.

    பத்தி பிரிக்காவிட்டால் சுவரில் ”வரட்டி” தட்டியது போல் ஆகி விடும். It becomes An Eye Sore! Please Pardon me for my Comparison.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: