நான்

நான் ராமச்சந்த்ர சர்மா. பிறந்து வளர்ந்தது தமிழ்நாடு திருச்சியினருகில் காவிரிக்கரையில் முத்தரசநல்லூர் என்ற கிராமத்தில். தற்போது வசிப்பது தஞ்சையிலும், திருவனந்தபுரத்திலும். தாய்மொழி தெலுகு. என் இயற்பெயர் சுசர்ல ராமச்சந்த்ர சர்மா. சுசர்ல என்பது என் குடும்பப்பெயர். கோதாவரிக்கரையில் மண்டபேட்ட எனும் இடத்தருகில் பூர்வீகம்.  படித்தது கணிப்பொறியியல். பிடித்தது இசை. சுசர்ல குடும்பத்தைச்சார்ந்த பலர் இசைத்துறையில் பெயர்பெற்றிருக்கிறார்கள். நான் சுமார் 18 வருடகாலம் கர்நாடக செவ்வியல் இசையை முறைப்படி கற்றுக்கொண்டேன். திருவைய்யாறு முதல் பல மேடைகளில் கச்சேரிகள் செய்திருக்கிறேன். தற்போது பாடுவதில்லை ஆனால் கேட்பதுண்டு.

கர்நாடக இசையில் பிடித்த பாடகர்களாக நான் கொள்வது மங்கலம்பள்ளி பாலமுரளிக்ருஷ்ணா, ஜி.என்.பி, ஹைதராபாத் சகோதரர்கள், ஓ.எஸ்.தியாகராஜன் மற்றூம், டி.என்.சேஷகோபாலன். பெண்பாடகர்கள் யாரையும் பிடிக்கவில்லை. ஹிந்துஸ்தானியில் பிடித்தவர்கள், பண்டிட் ஜஸ்ராஜ், பர்வீன் சுல்தானா, பீம்சென் ஜோஷி மற்றும் கிஷோரி அமோன்கர். மிகவும் விரும்பிக்கேட்பது ஜி.என்.பி. என் நண்பர் ராமச்சந்திரனின் (லலிதாராம்) தயவில் பல கச்சேரிகள் கிடைக்கப்பெற்றேன். அதுதான் பெரும்பாலான நேரம் எனது பொழுதுபோக்கு.

திரையிசையிலும் நாட்டமுண்டு. பெரும்பாலும் இளையராஜாவும் அவருக்கு முந்தைய காலகட்டத்தைய இசையமைப்பாளர்களும் பிடிக்கும். தற்போதைக்கு வித்யாசாகர் கொஞ்சம் கேட்பதுண்டு. மலையாளத் திரைப்படப் பாடல்கள் மிகவும் பிடித்தவை. குறிப்பாக ரவீந்த்ரன் மாஸ்டர் மற்றும் கைதப்ரம் தாமோதரன் நம்பூத்ரியின் பரம ரசிகன். எனது சேமிப்பில் பல நல்ல மலையாளப்பாடல்களும் உண்டு.

இலக்கியத்தில் லேசான பரிச்சயம் உண்டு. ஜெயமோகன். எனக்குப் பிடித்த ஒரே எழுத்தாள ஆளுமை. காரணம் என்று எதையும் சொல்லி குறுக்கவேண்டியதில்லை. அவரது கதைகளை விட அவரது மொழி ஆளுமை என்னை மிகவும் வியக்க வைக்கிறது. அஸெர்ட்டிவ் பெர்ஸன். இவர் எனக்கு எழுதிய ஒரு கடிதம் என் வாழ்க்கையை மாற்றிப்போட்டது.

 

 

2 Responses to நான்

  1. Anonymous says:

    Dear Ramachandra sharma

    Very nice to read your blog.

    I am rajagopalan, raju-from tanjore-northmain street.Basic schooling from tanjore (ranivaikkal elementary school,st. peters-palance annexe), a chartered accountant ,presently in dubai.

    I am happy to read that you learnt music-Vocal music . My cousin anand(presently in USA) learnt mridangam from Palghat Mani Iyer when Mani iyer lived for a few years in tanjore

    I enjoyed your blog.Keep writing .

    Raju-dubai

  2. arangasamy says:

    அழகான போட்டோ .

Leave a comment